« Home | மரணமில்லா வாழ்க்கைக்கு வழி »

தன் அயலானுடைய மனைவியை தீட்டுப் படுத்தமலும்

தன் அயலானுடைய மனைவியை தீட்டுப் படுத்தமலும்:

தனக்கு என்னதான் என்னதான் அழகான ஒரு மனைவி கிடைத்திருந்தாலும் பிறரின் மனைவியின் மேல் ஒரு ஈர்ப்பு வருவது அனேகமாக எல்லோருக்கும் இருக்கும் என்று நினைக்கிறேன். இது மனித இயல்பு என்று சொல்லுமளவுக்கு இன்று வயது வரம்பின்றி யார் என்று பார்க்காமல் மோகம் கொள்ளும் அளவுக்கு இந்த பாவம் வளர்ந்துள்ளது. பிசாசின் இந்த கண்ணியில் அநேகர் சிக்குண்டு விடுபட முடியாமல் தவிக்கின்றனர். ஏன் கிறிஸ்த்தவ பாஸ்டர்கள், பாதிரியார்கள்கூட இதில் விதி விலக்கல்ல. இதற்க்கு முக்கிய காரணம் இயேசு நியாயபிரமாணத்தை நிறைவேற்றி விட்டார் நாம் எதையும் கைக்கொள்ள வேண்டிய தேவை இல்லை என்று போதிக்கும் கூட்டத்தால் இப்படி கர்த்தரின் வார்த்தைகள் மேல் விசுவாசிகளுக்கு பயம் இல்லாமல் போய்விட்டது


பிறன் மனைவியை இச்சிக்க கூடாது என்பதை வேதம் பல இடங்களில் மிகவும் கண்டிப்பாக சொல்கிறது "பிறன் மனைவியை தொடுபவன் எவனும் ஆக்கினை தீர்ப்புக்கு தப்பான்" என்று நீதி மொழிகள் சொல்கிறது. "பிறன் மனைவியோடே சயனித்து அவளால் உன்னை தீடுப்படுத்தாதே" என்று கர்த்தரின் நீதி நியாயகளில் சொல்லப்பட்டுள்ளது. "பிறன் மனைவியை இச்சியாது இருப்பாயாக" என்று பத்து கட்டளைகளில் கடைசி கட்டளை சொல்கிறது நமதாண்டவர் இயேசு கூட "ஒரு ஸ்திரியை இச்சையோடு பார்த்தவன் எவனும் அவளோடு விபச்சாரம் செய்த பாவத்துக்கு உள்ளகிறான்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்தவத்தில் மட்டுலமல்ல பல இந்து புராணங்களில் கூட பிறன் மனைவியை இச்சித்து அழிந்து போன அனேக மதிகெட்டவர்களை பார்க்க முடியும்

ஆம் அன்பானவர்களே, மனிதனுக்கு கெடுதல்களை கொண்டுவரும் செயல்களில் அதிகம் கெடுதலை கொண்டு வருவது பிறன் மனைவியை இச்சித்தல் ஆகும். நாம் அதை நியாயப்படுத்த அனேக காரணங்களை சொல்ல முடியும். என்னதான் காரணங்கள் இருந்தாலும் கணவன் உயிரோடு இருக்கும் போது அவன் மனைவியுடன் தகாத உறவு கொள்பவன் நரக அக்கினிக்கு தப்புவது மிக மிக கடினம். அகவே அதிலிருந்து உடனடியாக விடுபட வேண்டும்.



Edit this page (if you have permission) | Google Docs -- Web word processing, presentations and spreadsheets.