« Home | தன் அயலானுடைய மனைவியை தீட்டுப் படுத்தமலும் » | மரணமில்லா வாழ்க்கைக்கு வழி »

ஒருவன் நீதிமானாய் இருந்து

1. ஒருவன் நீதிமானாய் இருந்து:

யார் நீதிமான் என்று சொல்லும் போது, அவன் நீதிமானாக இருக்கவேண்டும் என்று என்று வேதத்தில் சொல்லப்பட்டிருப்பதன் அருத்தம் எனக்கு நீண்ட நாளாக புரியவில்லை. ஒருநாள் இறைவன் அதை எனக்கு வெளிப்படுத்தினார். அதாவது ஒருவன் நீதிமானாக ஆக வேண்டுமென்றால் அவன் முதன் முதலில் இயேசுவின் பரிசுத்த இரத்தத்தால் கழுவப்பட்டு நீதிமானாக வேண்டும். இதை தான் எசாயா தீர்க்கன் மூலம் ஆண்டவர் 53:11ல் "என் தாசனாகிய நீதிபரர் தன்னை பற்றும் அறிவினால் அநேகரை நீதிமானாக்குவார்" என கூறுகிறார். . இதை நாம் சற்று விளக்கமாக பார்ப்பது நல்லது என நினைக்கிறேன். ஏனெனில் இது சம்பந்தமாக பல தவறான உபதேசம் அநேகரை துணிந்து பாவம் செய்யவைக்கிறது. இயேசு என்னை நீதிமானாக்கிவிட்டார் இனி பாவம் என்னை ஒன்றும் செய்யாது என்று பலர் இறைவனின் கட்டளைகளை துணிகரமாக மீறி பாவம் செய்து தண்டனையை அனுபவித்து வருகின்றனர். நீங்கள் எந்த காலத்தில் இருந்தாலும் எவ்வளவு பரிசுத்த இரத்தத்தால் கழுவப்பட்டாலும் பாவம் செய்தால் கண்டிப்பாக தண்டனை உண்டு. மனிதன் எதை விதைக்கிரானோ அதன் பலனை அறுத்தே தீருவான் ஏனென்றால் இந்த பூமியின் தன்மை அதுதான். பூமியில் விதை விதைத்தால் சில விதைகள் ஓரிரண்டு வாரங்களில் பலன் தரும், சில விதைகள் ஓரிரண்டு மதங்களில் பலன் தரும் சில விதைகள் சில வருடங்கள் கழித்தும், சில விதைகள் (பனை போன்றவை) சில தலைமுறைகள் கழித்தும் பலன் தரும். கோதுமையை விதைத்து நெல்லை அறுக்க முடியாது அதுபோல் எதை விதைக்கிறோமோ அது வட்டியும் முதலுமாக திரும்ப கிடைத்தே ஆகும். நன்மையை விதைத்தால் நன்மையும் தீமையை விதைத்தால் தீமையும் கண்டிப்பாக கிடைக்கும்.
.

அகவேதான் எரேமியா தீர்க்கன்: தன் பாவத்துக்கு வரும் தண்டனை குறித்து முறையிடுகிரதென்ன? நம் வழிகளை சோதித்து பார்த்து கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம் என்று புலம்பல் புஸ்தகத்தில் புலம்புகிறான்

தவறு இல்லாமல் தண்டனை இல்லை:
தவறு செய்யாத பிள்ளையை எந்த ஒரு நல்ல புத்தியுள்ள தகப்பனும் தண்டிப்பது இல்லை அல்லது பிறன் கையில் தண்டனைக்கு ஒப்பு கொடுப்பது இல்லை. இந்த உலக தகப்பனே இப்படி இருக்கும்போது, மகா நீதியுள்ள நமது பரமதகப்பன் யாரையும் தவறு இல்லாமல் தண்டிப்பதும் இல்லை சாத்தான் கையில் தண்டனைக்கு ஒப்பு கொடுப்பதும் இல்லை.
.
ஊழியர்களை பிசாசு கடினமாக தாக்குவான் என்பதெல்லாம் ஒரு தவறான உபதேசம். தான் உழைத்து சாப்பிடும் ஒரு விசுவாசியை விட, பிறரின் காணிக்கையில் வாழ்க்கை நடத்தும் ஊழியர்கள் செலவு செய்யும் ஒவ்வொரு காசுக்கும் இறைவனிடம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும். அதில் இறைவன் மிகவும் கண்டிப்பான தகப்பன் போல இருக்கிறார் அதில் ஊழியர்கள் தவறு செய்யும் போது இறைவனின் தண்டணையை பெற நேரிடுகிறதே அன்றி வேறொன்றும் இல்லை. ஆண்டவரின் அனுமதி இன்றி யாரும் நம் மேல் கை வைக்க முடியாது. அதுபோல் நம் மேல் குற்றம் இல்லாமல் இறைவன் யாரையும் நம்மை தொட அனுமதிப்பது இல்லை ஆனால் இன்றைய பாஸ்டர்கள் எதாவது நோய் நொடி விபத்து வந்து விட்டால் தான் செய்த பாவம் என்ன என்பதை ஆராய்ந்து பார்த்து திருத்திக்கொள்ளாமல், சாத்தான் தாக்குகிறான் என சாத்தான் மேல் பழியை போட்டு தனது பாவத்தை மறைத்து விடுகின்றனர். அதைப்பற்றி நான் அதிகம் எழுத விரும்பவில்லை கர்த்தருக்கு சித்தமானால் அதை பற்றி தனி கட்டுரையில் எழுதுகிறேன்.
இப்பொழுது நமது மெயின் பாயண்டை பார்ப்போம்

இயேசு நியாயபிரமாணத்தின் எந்த பகுதியை முடித்தார். . இயேசு நியாயபிரமாணத்தின் முதல் இரண்டு பகுதியாகிய கர்த்தரின் கட்டளைகளையோ கர்த்தரின் நீதி நியாயங்களையோ மாற்ற அல்லது முடிக்க வரவில்லை என முன்பே வசன ஆதாரங்களுடன் சொல்லி இருந்தேன். இப்பொழுது இயேசுவின் சிலுவை மரணத்தால் நியாயபிரமாணத்தின் அடுத்த இரண்டு பகுதியான கர்த்தரின் வாசஸ்தலம் அமைப்பது, பாவத்துக்கான பலியிடுதல் அதாவது இரத்தம் சிந்துதல் சம்பத்தப்பட்டவைகள் எப்படி முடிவடைகிறது என்பதை வசன அதாரத்தோடு பார்க்கலாம். .

தேவன் சீனாய் மலையில் தமது வாசஸ்தலம் அமைக்கும் முறை பற்றி விளக்கமாக தெரிவித்தார். மோசேயும் அதே மாதிரியில் வாசஸ்தலத்தை அமைத்து, அவர் கட்டளை இட்டபடியே ஒரு வெளி பிரகாரம், பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம் என்னும் மூன்று பாகங்களால் ஆன வாசஸ்தலத்தை நிறுவிய போது கர்த்தரின் மகிமை வாசஸ்தலத்தை நிரப்பிற்று என்று யாத்ராகமம் 48:35ல் வாசிக்கிறோம். .

அதேபோல் கர்த்தர் நிலையாக தங்கும் ஒரு ஆலயத்தை எப்படியாவது கட்டவேண்டும் என்ற தீராத வாஞ்சை தாவீது ராஜாவுக்கு இருந்தது. ஆகவே கர்த்தர் அவன் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக அவரின் குமாரன் சாலமோன் மூலம் தனக்கு ஒரு ஆலயம் கட்டப்படும் என்று அறிவித்தார். அதன்படி ராஜாவாகிய சாலமோன் கர்த்தருடைய ஆலயத்தை கட்டி முடித்தபோது கர்த்தருடைய மகிமையாகிய மேகம் அந்த ஆலயத்தை நிரப்பிற்று என்று I இராஜாக்கள் புத்தகம் 8:10,11ல் பார்க்கலாம்.

சாலமோன் செய்த விண்ணப்பத்தை கேட்ட கர்த்தர் சாலமோனுக்கு இரண்டாம் விசை தரிசனமாகி "என் கண்களும் என் இருத்தயமும் எந்நாளும் அங்கே இருக்கும் (Iஇராஜா:9:3) என்று சொன்னாலும். அவர் சொன்ன கட்டளைகளையும், நியாயங்களையும் கை கொள்ளாவிட்டால் "இந்த ஆலயத்தை என் சமூகத்தை விட்டு தள்ளுவேன்" என்று தொடர்ந்து வரும் வசனங்களில் கூறியுள்ளார். . மேலும் கர்த்தரின் ஆலயம், கர்த்தரின் ஆலயம்,கர்த்தரின் ஆலயம் இதுவே என்று சொல்லி பொய் வார்த்தைகளை நம்பிகொள்ளாதிருங்கள்((எரே:7:4) என்றும் சொல்வதால் அது அவர் நிலையாக தங்கும் இடமல்ல. .

நான் உங்கள் நடுவில் உலாவி உங்கள் தேவனாய் இருப்பேன் (லேவி26:12)உன்னதத்தில் வாசம் பண்ணுகிற நமது தேவனாகிய கர்த்தர் (சங்:113:5), நொறுங்குண்டு பணிந்த ஆவி உள்ளவர்களிடத்திலும் வாசம் பண்ணுகிறேன் (ஏசா: 57:15) மற்றும் எருசலேமில் வாசம் பண்ணும் கர்த்தர், சீயோனில் வாசம் பண்ணும் கர்த்தர், கேரூபின்கள் மத்தியில் வாசம் பண்ணும் கர்த்தர் என்று தான் வாசம் பண்ணும் இடங்களை பற்றி பல்வேறு விதமாக சொல்லும் கர்த்தர் "வானம் எனது சிங்காசனம் பூமி எனது பாதப்படி" என்று ஏசாயா தீர்க்கன் முலம் சொல்வதால் மனிதன் கைவேலையாய் செய்யும் எதிலும் வாசம் செய்வது இல்லை (அப்:17:24).

இதிலிருந்து நாம் பழைய உடன்படிக்கை காலத்தில் கர்த்தர் தன்னை தொழுவதற்கு ஆசரிப்பு கூடாரம் மற்றும் ஆலயம் அமைக்க சொல்லியிருந்தாலும், அவர் எல்லா இடத்திலும் எல்லா நேரத்திலும் இருக்க வல்லவர் என்றும், அது போல் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பார்க்க வல்லவர் அறிந்து கொள்ளலாம். ஆகவேதான் யாவனாகிலும் தன்னை நான் காணாதபடிக்கு மறைவிடங்களில் ஒளித்துக்கொள்ள கூடுமோ" என்று எரே:23:24ல் கூறுகிறார். .

நாம் புதிய உடன்படிக்கையின் காலத்துக்கு வரும்போது இயேசு கிறிஸ்து "பிதாவை எங்கும் தொழுது கொள்ளும் காலம் வரும், அது இப்பொழுது வந்திருக்கிறது" என்று சொல்கிறார்.

அது எப்படி வந்தது இயேசு சிலுவையில் மரித்தபோது என்ன நடந்தது: .
தேவாலயத்தின் திறைசீலை நடுவில் இரண்டாக கிழிந்தது (லுக்:23:45) இதே வசனத்தை மத்:28:51, மாற்கு:15:38 லும் பார்க்கலாம்.

அந்த திரை சீலை தான் மகா பரிசுத்த ஸ்தலத்தையும் பரிசுத்த ஸ்தலத்தையும் பிரிக்கும் தடுப்பு ஆகும். கர்த்தரின் கட்டளைபடி பிரதான ஆசாரியன் மட்டுமே வருடத்துக்கு ஒரு முறை அந்த திரையை கடந்து மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் போய் எல்லோருக்குமாக பாவநிவர்த்தி செய்து வருவான். அவனும் எதாவது தவறு செய்திருந்தால் அங்கேயே குளோஸ் பிறகு கயிறை கட்டித்தான் இழுக்க வேண்டி வரும். .

இப்படி யாருமே பிரவேசிக்க முடியாமல் இருந்த அந்த மகா பரிசுத்த ஸ்தலம் இயேசுவின் மரணத்தின் மூலம் திறக்கப்பட்டு யார் வேண்டுமானாலும் உள்ளே செல்லும் வழி பிறந்தது .
இவ்வளவு கட்டுப்பாடோடும், பரிசுத்ததோடும் காக்கப்பட்ட அந்த ஸ்தலத்துக்குள் என்ன இருந்தது தெரியுமா?

மோசே ஒரேபியிலே அந்த பெட்டியில் வைத்த இரண்டு கற்பலகைகளே அல்லாமல் வேறொன்றும் அதில் இல்லை (Iஇராஜா:8:9)

ஆம் அன்பானவர்களே! இறைவனின் கட்டளைகள் அதுவும் அவர் கைப்பட எழுதிகொடுத்த வார்த்தைகள் அவ்வளவு பரிசுத்தமும் என்றும் மாறாததுமாகும். அதுதான் இறைவன் மீண்டும் மீண்டும் அதாவது பழைய ஏற்பாட்டின் கடைசி புத்தகமாகிய மல்கியா கடைசி அதிகாரமாகட்டும், வெளிபடுத்தின விசேஷம் கடைசி அதிகாரமாகட்டும்
.
என் தாசனாகிய மோசேக்கு நான் கற்பித்த நியாய பிரமாணமாகிய கட்டளைகளையும் நியாயங்களையும் நினையுங்கள் (மல்:4:4) ஜீவ விருட்சத்தின் மேல் அதிகாரம் உள்ளவர்களாவதர்க்கும் வாசல் வழி நகரத்துக்குள் பிரவேசிப்பதர்க்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்பவர்கள்தான் பாக்யவாங்கள் (வெளி: 22:14)
என்று திரும்ப திரும்ப சொல்கிறார்.

நான் நிச்சயித்து சொல்லும் ஒரு காரியம் என்னவென்றால் உலகில் உள்ள ஒவொருவரும் இந்த 10 கட்டளைகளின் எதாவது ஒரு கட்டளையால் பிடிக்கப்பட்டிருப்போம் உங்கள் வாழ்க்கையை சற்று சோதித்து பாருங்களேன்.

பலியிடுதல் இரத்தம் சிந்துதல்:
(பலி என்பது எப்படி முதன் முதலில் இந்த பூமிக்குள் நுழைந்தது என்பதை இந்துக்களுக்கான வரலாறை எழுதும்போது விளக்கமாக எழுதுகிறேன்)
நமது வேதத்தில் பலி என்பது ஆதம் பாவம் செய்த பிறகு ஆரம்பமாகி உள்ளது. சாத்தானால் வஞ்சிக்கப்பட்டு தேவனின் கட்டளையை மீறி கனியை சாப்பிட்ட ஆதமை, சாத்தான், தேவன் அவனுக்கு அணிவித்திருந்த மகிமையின் ஆடையை உரிந்து நிர்வாணியாக விட்டுச்சென்றான். அந்த நிர்வாணத்தை மறைக்க அவன் உடுத்திய அத்தியிலைகளானது அவனது நிர்வாணத்தை முழுமையாக மறைக்க முடியவில்லை எனவே "தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கும் அவன் மனைவி ஏவாளுக்கும் தோல் உடைகளை உண்டாக்கி உடுத்தினார்" (அதி 3:21) என வேதம் சொல்கிறது.
.
தோல் வேண்டுமென்றல் ஒரு உயிர் கொல்லப்பட வேண்டும். அகவே அங்குதான் முதல் பலி உண்டானது. ஆதாமின் பாவத்துக்காக ஒரு பாவமறியா ஜீவன் அங்கு கொல்லப்பட்டது. மேலும் இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை என்ற இறைவனின் நியமணத்துக்கு இணங்க எந்தெந்த பாவங்களுக்கு என்னென்ன பலிகளை செலுத்தவேண்டும் என்று போஜனபலி, பானபலி, சமாதான பலி, பாவ நிவாரணபலி, குற்றநிவாரண பலி, சர்வாங்க தகனபலி என்று பல்வேறு பலிகளை இறைவன் லேவியராகம புத்தகம் 1ம் அதிகாரத்தில் இருந்து சொல்லியிருந்தாலும், பலியிடுதல் என்பது தேவனின் மன விருப்பத்துக்கு ஏற்றதல்ல என்றும், எதோ ஒரு நிர்பந்தத்தால்தான் அதை செய்ய கட்டளை இட்டார் என்பதையும் தனது பல்வேறு தீர்க்கதரிசிகள் முலம் கர்த்தர் பேசிய கீழ்காணும் வசனங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

  • பலியை அல்ல இரக்கத்தையே விரும்பிகிறேன், தகன பலிகளை காட்டிலும் தேவனை அறிகிர அறிவையும் விரும்புகிறேன் (ஓசி:6)
  • உங்கள் பலிகளின் திரள் எனக்கு என்னத்துக்கு என்று கர்த்தர் சொல்லுகிறார் (ஏசா:1:11)
  • நான் உங்கள் பிதாக்களை எகிப்த்து தேசத்தில் இருந்து அழைத்துவந்த நாளிலே தகன பலிகளை குறித்தும் மாற்ற பலிகளை குறித்தும் நான் பேசியதையும் கட்டளை இட்டதையும் பார்க்கிலும் என் வார்த்தைக்கு செவிகொடுங்கள் அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன்(எரே:7:22)
  • கர்த்தர் சத்தத்துக்கு கீழ்படிதலை பார்க்கிலும் சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்கு பிரியமாயிருக்குமோ? பலியை பார்க்கிலும் கீழ்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தை பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம் (I சாமு:15:22)

எனவே இயேசுவானவர் மனிதனின் எல்லா பாவத்துக்கும் ஒரே தரமாக தனது இரத்தத்தை சிந்தும்வரையுள்ள இடைப்பட்ட காலக்கட்டத்தில் பவ நிவர்த்தி செய்வதற்காக இறைவனால் கட்டளையிடப்பட்டதே இந்த பலிகளும் இரத்தம் சிந்துதல் சம்பத்தப்பட்டவைகளும். ஆட்டுக்கடாக்க்களின் இரத்தத்தை பார்க்கிலும் வல்லமை உள்ள இயேசுவின் இரத்தம் மூலம் பலிகளும், தனது மாமிசத்தை நொறுக்கக்கொடுத்ததின் மூலம் மாமிசம் சம்பந்தப்பட்ட தீட்டுப்படுதல், விருத்தசேதனம் பண்ணுதல் போன்ற சடங்குகளும் ஒரு முடிவுக்கு வந்தது.


அகவே நியாயபிரமாணத்தில் இரண்டு பகுதியான கர்த்தரின் வாசஸ்தலம், மற்றும் பலியிடுதல் இரண்டும் இயேசுவின் மரணம் மூலம் முடிவடைந்தது என்பதை இயேசுவின் வார்த்தை மற்றும் தீர்க்க்கதரிசிகளின் வார்த்தைகள் மூலமே நாம் பார்த்துவிட்டோம். ஆனால் கர்த்தரோ, இயேசு கிறிஸ்துவோ எந்த இடத்திலும் எனது கட்டளைகளையும், நியாயங்களையும் கை கொள்ள வேண்டிய தேவை இல்லை என்று கூறவே இல்லை. அப்படி எங்கும் வேதத்தில் இருந்தால் தயவு செய்து எனக்கு தெரிவியுங்கள்.


நாம் இந்த பூமியில் பிறந்ததே பாவம்:
இரண்டாவதாக நாம் ஒவ்வொருவரும் இந்த பூமியில் பிறக்கும்போதே பாவத்தில்தான் பிறக்கிறோம் "என் தாய் என்னை பாவத்தில் கர்ப்பம் தரித்தாள்" என்று சங்கீதம் சொல்கிறது. எப்படியெனில் புசிக்க கூடாது என்று இறைவன் விலக்கிய கனியை புசித்த பிறகுதான் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் ஆண் பெண் என்ற வித்தியாசம் தெரிந்து முதல் குழந்தையே பிறந்தது. எனவே முதல் குழந்தை பிறந்ததே பாவம்தான். அதாவது பிறக்க தகுதியில்லாத நாம் பாவத்தின் காரணமாக பூமியில் பிறந்து விட்டோம். அந்த பிறந்த பாவத்தை மன்னிக்க ஒருவர் இறந்தே ஆக வேண்டும் அது இயேசுவின் மூலம் நிறைவேறியது.
.

எனவே ஒருவன் நீதிமானாக வேண்டுமென்றால் முதல் முதலில் இயேசுவின் பரிசுத்த இரத்தத்தால் கழுவப்பட்டு தான் பூமியில் பிறந்த பாவம் மற்றும் பிறந்ததில் இருந்து அந்த நாள் வரை செய்த எல்லா பாவங்களும் மன்னிக்கப்படு நீதிமானாக வேண்டும். அதன் பிறகுதான் இரண்டாவது ஸ்டெப் போக முடியும்.

Edit this page (if you have permission) | Google Docs -- Web word processing, presentations and spreadsheets.