« Home | ஒருவன் நீதிமானாய் இருந்து » | தன் அயலானுடைய மனைவியை தீட்டுப் படுத்தமலும் » | மரணமில்லா வாழ்க்கைக்கு வழி »

நியாயமும் நீதியும் செய்து:

2. நியாயமும் நீதியும் செய்து:
ஒருவன் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு நீதிமானாய் இருந்தால் மட்டும் போதாது அவன் நியாயமும் நீதியும் செய்ய வேண்டும்.

அன்பானவர்களே, நியாயம், நீதி இவை இரண்டும் இரட்டை குழந்தைகளை போன்றது. இந்த வார்த்தைகள் இல்லாத புத்தகமே வேதத்தில் இல்லை எனலாம். அவ்வளவு முறை இறைவன் நீதி நியாயத்தை பற்றி சொல்லிவிட்டார். அதாவது ஏறக்குறைய 200க்கும் மேல்பட்ட இடங்களில் நீதி நியாயம் சம்பந்தமான வார்த்தைகள் வேதத்தில் உள்ளது.

அவற்றில் பழைய உடன்படிக்கையில் இரண்டும், புதிய உடன் படிக்கையில் இரண்டு மட்டும் கீழே உள்ளது:

  • கர்த்தர் சொல்கிறார் நியாயத்தை கை கொண்டு நீதியை செய்யுங்கள் (ஏசா:56:1)
  • நியாயம் தண்ணீரைபோலவும் நீதி வற்றாத நதியை போலவும் புரண்டுவரக்கடவது (ஆமோ:5:24)
  • வேதபாரகர் பரிசேயர் நீதியிலும் உங்கள் நீதி அதிகமயிராவிட்டால் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள் (மத் 5:20)
  • நியாயம் இன்னதென்று தீர்மானிக்காமல் இருக்கிரதென்ன(லூக்: 12:57)

இவ்வளவு முக்கியமான வார்த்தைக்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள். எந்த சபையிலாவது நீதி நியாயம் பற்றி விளக்கும் செய்திகள் கொடுக்கப்படுகிறதா? எனக்கு தெரிந்து ஒரு புத்தகம் கூட இந்த தலைப்பில் இருந்தமாதிரி தெரியவில்லை. இந்த நிலை ஏன்? தேவன் திரும்ப திரும்ப சொல்லும் வார்த்தைகளுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்காமல் நாம் என்னத்தை பேசிக்கொண்டு இருக்கிறோம்?

.
இலவசமாக தேவ நீதி நமக்கு கிடைத்தது உண்மை தான். அதற்காக நான் கிடைத்த நீதியை காத்துக்கொள்ள எந்த முயற்சியும் எடுக்கமாட்டேன் எந்நாளும் எங்கு இலவசமாக கிடைக்கிறதோ அதையே எதிர்பார்த்துக்கொண்டு இருப்பேன் என்பது சரியா?
.
எதோ மழை வெள்ளம் வந்ததால் அரசாங்கம் ஒரு குடும்பத்தும் 2000/- ரூபாயும் கொஞ்சம் அரிசியும் கொடுத்தால் வாழ்நாளெல்லாம் அப்படி கிடைக்கும் இலவசத்தையே எதிர்பார்த்து உழைத்து சம்பாதிக்க சோம்பேறித்தனம் படுவது போலல்லவா இன்றைய போதனைகள் இருக்கிறது.

தேவ நீதிக்கு முன் நம் நீதி ஒன்றுக்கும் உதவாததுதான் ஆனாலும் நம்மால் செய்ய முடிந்த அந்த நீதியை இறைவன் நம்மிடம் எதிர்பார்க்கிறார். அதுதான் திரும்ப திரும்ப நீதி செய், நியாயம் செய் என்று சொல்கிறார். மாதம் 20000/-ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு தகப்பனுக்கு தனது மகன் சம்பாதித்த 1000 ரூபாய் ஒன்றுமில்லைதான் அதற்காக நீ வேலைக்கே போக வேண்டாம் என்றும் எனது சம்பளத்திலேயே சாப்பிடு என்று எந்த தகப்பனும் சொல்வதில்லை. தன்னை போல தன் பிள்ளையும் வரவேண்டும் என்றுதான் எந்த தகப்பனும் எதிர்பர்ப்பான் அது போலத்தான் இறைவனும்.
.
நியாயத்துக்கும் நீதிக்கும் என்றுமே எதிர்த்து நிக்கும் சாத்தானின் தந்திரத்தால் கட்டுண்டு கிடக்கும் நமக்கு இறைவன் எத்தனை முறை கத்தினாலும் நமது காதில் அது விழுவது இல்லை

ஒவ்வொன்றையும் விளக்கமாக எழுதினால் நேரம் போதாது அகவே நீதி நியாயம் இவை இரண்டுக்கும் சில உதாரணங்களை சொல்லி இந்த டாப்பிக்கை முடித்து விடுவோம்.

"நியாயம் செய்தல்" என்ற பதத்தின் சரியான அருத்தம் என்னவெனில் "பிறரின் நியாயமான கோரிக்கைகளுக்கு எந்த விதத்திலும் பங்கம் வராமல் ஒருவன் நடந்துகொள்வது ஆகும். நமது நியாயமான கோரிக்கைகளை பிறருக்காக விட்டுக்கொடுத்தல் மற்றும் சில நேரங்களில் பிறரின் அநியாயமான செயலை கூட தாங்கிக்கொண்டு அதற்கு பதில் செய்யாமல் இருத்தல் எல்லாமே இதில் அடங்கும்.

இதற்க்கு சரியான உதாரணம் எதுவென்றால் "பருந்திடம் தப்பி வந்த புறா ஒன்று தனது மடியில் தஞ்சம் அடையவே, பருந்தில் நியாயமான கோரிக்கையை ஏற்றுக்கொண்டு புறாவின் எடைக்கு எடை தனது தொடை சதையை அறுத்துக்கொடுத்தானே சிபி சக்கரவர்த்தி" அவனை போல தனக்கு துன்பம் நட்டம் வந்தாலும் பிறர் நியாயத்தை நிலைநாட்டுதல் ஆகும்.

இறைவன் எதிர்பார்க்கும் நீதி செய்தல் என்பதற்கு சரியான உதாரணம் "தன் மகன் ஒரு கன்றை தேரை ஏற்றி கொன்றான் என்பதை கேள்விப்பட்டதும் தன் மகனையும் அதே போல் தேரை என்றி கொன்றானே மனுநீதி சோழன்" அது போன்றது. .

இப்படி புற ஜாதியார் நீதியும் நியாயமும் செய்திருக்க மகா நீதிபரரின் பிள்ளைகளாகிய நாம் அதற்கு ஒருபடி மேலே நீதி நியாயம் செய்ய வேண்டாமா?

தன் பிள்ளைய பிறர் பிள்ளையா, தன் ஜாதிய பிறர் ஜாதியா, தன் மதமா பிற மதமா என்றெல்லாம் பார்த்து நியாயத்தை புரட்டாமல் பணம், அழகு, செல்வாக்கு, போன்றவற்றுக்கு மயங்காமல் பயப்படாமல் சரியான நீதி செய்ய வேண்டும். .

"பரிசெயார் சதுரேயர் என்பவர்களின் நீதியிலும் உங்கள் நீதி அதிகமாக இராவிட்டால் நீங்கள் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டிர்கள்" என்று இயேசு சொன்னதை நினைவு கூறுங்கள்.

Edit this page (if you have permission) | Google Docs -- Web word processing, presentations and spreadsheets.