« Home | மலைகளின் மேல் சாப்பிடாமலும்: » | நியாயமும் நீதியும் செய்து: » | ஒருவன் நீதிமானாய் இருந்து » | தன் அயலானுடைய மனைவியை தீட்டுப் படுத்தமலும் » | மரணமில்லா வாழ்க்கைக்கு வழி »

இஸ்ரவேல் தேசத்தாரின் நரகலான விக்கிரகங்களுக்கு நேராக தன் கண்களை ஏறெடுக்காமலும்

4. இஸ்ரவேல் தேசத்தாரின் நரகலான விக்கிரகங்களுக்கு நேராக தன் கண்களை ஏறெடுக்காமலும்:-

பைபிள் எழுதப்பட்ட காலத்தில் இருந்து இன்று வரை இஸ்ரவேல் மக்கள் பல்வேறு விக்கிரகங்களை வணங்கி வருவதை நாம் கான முடியும். "பாகால்" "வானராங்கி" "தாகோன்" மற்றும் சூரியன் போன்றவற்றுக்கு விக்கிரகங்களை உண்டாக்கி இஸ்ரவேல் மக்கள் வணங்கி வந்துள்ளனர். அவற்றுக்கு நேராக தன் கண்களைக்கூட ஏறெடுக்க்கக்கூடாது என இறைவன் கட்டளை இட்டுள்ளார். இது மட்டுமல்ல

"மாதா சிலை" "குழந்தை ஏசு மன்றும் ஏசு சிலை, மிக்காவேல் சிலை போன்ற எந்த விக்கிரகங்களையும் வணங்கக்கூடாது என்பது கர்த்தரின் கட்டளையாகிய "மேலே வானத்திலும் கீழே பூமியிலும் உண்டாயிருக்கிரதற்கு ஒப்பான ஒரு சுரூபத்தயாவது விக்கிரத்தயாவது நீ எனக்கு உண்டாக்க வேண்டாம் அதை நமஸ்க்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்" என்பதுள் அடங்குகிறது.


கர்த்தர் விக்கிரக வழிபாட்டை மிக கடுமையாக வெறுப்பதை நாம் பரிசுத்த வேதாகமத்தில் பல இடங்களில் பார்க்க முடியும். இது ஏன் என்று இறைவனிடம் அமர்ந்தது விசாரித்த போது அவர் சொன்னது:-"இன்று உலகில் மந்திரவாதங்கள், பில்லி சூனியங்கள் பெருகிவிட்டது. ஒருவன் பெயரை கேட்டவுடன் அவன் ஜாதகத்தையே கணித்து சொல்லுமளவுக்கு மேதைகள் இன்று உலகில் உள்ளனர். நம்மை பற்றி இறைவனுக்கு எவ்வளவு தெரியுமோ அதே அளவுக்கு சாத்தானுக்கும் தெரியும் என்றதோடு,

பில்லி சூனியம் மந்திரம் செய்பவர்கள் ஒருவர் கும்பிடும் தெய்வம் எது என்று தெரிந்து அந்த தெய்வத்தின் படம் உருவம் போன்றவற்றை சூனியம் செய்யும் இடத்தில் வைத்து மந்திரம் செய்வதன் மூலம் அந்த தெய்வத்தாலேயே அவர்களை காப்பற்ற முடியாமல் போய்விடும். அகவேத்தான் உருவத்தை வைத்து வழிபட வேண்டாம் என்று சொன்னதோடு என் உருவத்தையும் நான் முழுமையாக யாருக்கும் இதுவரை காட்டவில்லை. என்று விளக்கினார்.

விக்கிரக வழிபாடு வேண்டாம் என்று சொன்னது நமது நான்மைக்காகதான் என்பதால் விக்கிரக வழிபாட்டை விட்டு விட வேண்டும்.


Edit this page (if you have permission) | Google Docs -- Web word processing, presentations and spreadsheets.