« Home | தூர ஸ்திரியோடே சேராமலும்:- » | இஸ்ரவேல் தேசத்தாரின் நரகலான விக்கிரகங்களுக்கு நேரா... » | மலைகளின் மேல் சாப்பிடாமலும்: » | நியாயமும் நீதியும் செய்து: » | ஒருவன் நீதிமானாய் இருந்து » | தன் அயலானுடைய மனைவியை தீட்டுப் படுத்தமலும் » | மரணமில்லா வாழ்க்கைக்கு வழி »

ஒருவனையும் ஒடுக்கமலும்

ஒருவனையும் ஒடுக்கமலும்:-


இந்த உலகில் மேல் அதிகாரத்தில் இருப்பவர்கள் தனக்கு கீழே உள்ள ஆத்துமாக்களை ஒடுக்குவது என்பது சகஜமாக உள்ளது. அதோடு அல்லாமல் தனக்கு கீழ் உள்ளவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதுதான் மேல் அதிகாரிக்கு மதிப்பு என்பது போலவும் ஒரு நிலை உள்ளது.

"சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க மட்டர் என்பது போல" மேலதிகாரியே ஒருவேளை சாந்தமாக நடந்து கொண்டாலும் அவர்களுக்கு கையாளாக இருப்பவர்கள் தன்னை நாடி வருபவரிடம் கடுமையாக நடந்து கொள்வதை அனேக இடங்களில் காண முடியும்.

நம்மிடம் ஒருவன் சாந்தமாக நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கும் நாம், தனக்கு கீழ் உள்ள மனிதர்களிடம் எவ்வாறு நடந்து கொள்கிறோம்? ஒருவர் நம்மை திட்டி விட்டால் அந்த கோபத்தை அவரிடம் திரும்ப கட்ட முடியாவிட்டால் தனக்கு கீழ் உள்ளவர்களிடம் அதை அப்படியே வெளிப்படுத்துகிறோம். அது தவறு

ஒருவனையும் ஒடுக்ககூடாது என்ற இறைவனின் கட்டளை "தன் அதிகாரத்துக்கு உட்பட்ட தனக்கு கீழ் உள்ள யாரையும் கடினமாக நடத்தாமல் அன்பாக சாந்தமாக நல் வார்த்தைகள் மூலம் நடத்த வேண்டும் என்பதை குறிக்கிறது. அவனும் நம்மை போல மனிதன் தானே!

பணக்கரனையும் தனக்கு மேல் அதிகாரத்தில் உள்ளவனையும் பார்த்து நடுங்கும் நாம் ஏழைகளையும் தன்னை விட தாழ்ந்த நிலையில் உள்ளவர்களையும் கண்டு கொள்வதே இல்லை. அவர்கள் வார்த்தைகளை ஒரு பொருட்டாகவே மதிப்பதி இல்லை.

"ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து பிறக்கும் போது ஒரு சாதரண தச்சர் குடும்பத்தில் மாட்டு தொழுவத்தில் தான் பிறந்தார்" அவர் நினைத்தால் ராஜாக்களின் வீட்டில் பிறந்து சுகபோக வாழ்க்கை வாழ்ந்திருக்க முடியும் ஆனாலும் அப்படி பிறக்காமல் ஏழையாக பிறந்ததன் மூலம் நாம் ஏழையை மதிக்க வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துகிறது.

தனக்கு கீழ் உள்ளவர்களுக்கு உதவி செய்யவிட்டலும் பரவாயில்லை அவர்களை ஒடுக்குவது மிக மிக தவறு.

Edit this page (if you have permission) | Google Docs -- Web word processing, presentations and spreadsheets.