மரணமில்லா வாழ்க்கைக்கு வழி

(இதை படிக்கும் முன் தயவு செய்து http://www.victoryondeath.blogspot.com/ உள்ள இதன் முந்தய பகுதியை படிக்கவும்)
வரைபட விளக்கம்:
இந்த வரைபடம் மனிதனுக்கும் தேவனுக்கும் உள்ள உறவை விளக்குவது ஆகும். இறைவன் உண்டாக்கி ஏதேன் தோட்டத்தில் வைத்த முதல் மனிதன் பாவம் செய்து தேவனை விட்டு பின்வாங்கி போனான். ஒரு நிலையில் மனிதனின் அக்கிரமம் பொறுக்க முடியாமல், இறைவன் உலகத்தை ஜலத்தின் மூலம் அழித்தார். அழிவில் இருந்து தப்பிய நோவா என்ற நீதிமானின் சந்ததியில் இருந்து வந்த ஆபிரகாமை இறைவன் அழைத்து வழி நடத்தி அவர் சந்ததியில் இயேசு என்னும் இரட்ச்சகரை எழுப்பி எல்லா மனிதனின் மொத்த பாவத்துக்க்காகவும் சிலுவையில் அவரை மரிக்கும்படி செய்தார். .
இயேசுவின் மரணத்தின் மூலம் ஒரு மனிதன் எந்த நிலையிலும் (அதாவது மிக கொடூரமான பாவம் செய்திருந்தால் கூட) தேவனுடன் ஒப்புரவாகி பரலோக ராஜ்யம் போக முடியும். . இயேசுவை ஏற்றுக்கொண்ட மனம்திரும்பி இரட்சிக்கப்பட்ட யாவரும் கடந்த காலத்தில், அந்த நாள் வரை செய்த எல்லா பாவங்களும் கழுவப்பட்டு இரட்சிப்பு என்னும் ஒரு சந்திப்பை வந்து அடைகின்றனர். அங்கிருந்து வழி இரண்டாக பிரிகிறது.
வழி 1. மிக சமீபமாக இருக்கும் பரலோக ராஜ்யம் போகும் வழி:
இங்கு போக வேண்டுமென்றல் மனிதன் தன் மாமிசத்தில் மரித்தே ஆகவேண்டும். இங்கு போவதன் மூலம் போகும் அந்த நபர் ஒருவரே நரக அக்கினியில் இருந்து தப்பிக்க முடியும். மேலும் இங்கு ஒருவர் போவதினால் சாத்தானுக்கோ அவன் ராஜ்யத்துக்கோ எந்த பாதிப்பும் இல்லை. இது தான் இன்றைய கிறிஸ்தவத்தின் வழி. அதை பற்றி விளக்க அனேக கிறிஸ்தவ அமைப்புகள், ஊழியர்கள் உள்ளனர். .
வழி 2. மிக தூரத்தில் இருக்கும் ஏதேன் தோட்டம் போகும் வழி
இது ஜீவ விருட்சம் உள்ள ஏதேன் தோட்டத்துக்கு வந்த பாதையிலே திரும்பி போகும் வழி. இது ஒரு கடினமான நீண்ட வழி. இங்கு ஒரு மனிதன் போய் சேர்ந்துவிட்டால் அவன் மரணமில்லா வாழ்க்கையை அடைவதோடு மொத்த மனித கூட்டத்தையும் நரக அக்கினியில் இருந்து மீட்டுவிட முடியும். அதாவது வேரோடு மொத்த மனித கூட்டத்தையும் நரக அக்கினியில் இருந்து பாதுகாக்க முடியும். ஏனெனில் எல்லாமே ஒரே மனிதனால் தான் வந்தது அதுபோல் எல்லாமே ஒரே மனிதனால்தான் முடியும். .
இயேசு மனிதனாக வந்தாலும் அவர் மனித வித்தினால் பிறக்கவில்லை அவர் இறைவனின் வித்து அகவே அவர் நமக்கு சரியான பாதையை காட்டி உதவி செய்யத்தான் முடியுமே அன்றி வேறொன்றும் செய்ய முடியாது. "வானத்திலும் பூமியிலும் அவருக்கு சகல அதிகாரமும் உள்ளது" அவரை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் பாவத்தில் மரித்து நரகத்துக்கு போகும் மனிதனை தடுத்து நிறுத்த அவரால் முடியாது..
மேலும் இறைவனும் தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்து விட்டார்.
தன் சொந்த குமாரனையே நமக்காக கொடுத்துவிட்டார் அவரும் தன் கடைசி சொட்டு இரத்தம் வரை நமக்காக சிந்தி விட்டார். இனி நாம் தான் ஆதாமின் இடம் வரை போய் மனித வர்க்கத்தை மீட்க வேண்டும். சிலுவையில் இயேசு எல்லாம் முடிந்தது என்று சொன்னதன் காரணம் தேவன் தனது பக்கம் இருந்து செய்ய வேண்டிய எல்லாம் முடிந்துவிட்டது என்பதைத்தான் சொல்கிறதே அல்லாமல் இன்றைய கிறிஸ்தவர்கள் சொல்வதுபோல் நாம் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் அவர் செய்துவிட்டார் நாம் ஒன்றும் செய்ய வேண்டிய தேவை இல்லை என்பதை குறிப்பதர்க்காக அல்ல. அப்படி அவரால் நமக்கும் சேர்த்து எல்லாவற்றையும் செய்து முடிக்க முடியுமானால் இவ்வளவு பெரிய பைபிள் எதற்கு திரும்ப திரும்ப என் வார்த்தையை கை கொள்ளுங்கள் என்று ஏன் அவர் நம்மை பார்த்து சொல்லவேண்டும். இயேசுவின் மேல் உள்ள விசுவாசம் மட்டும் போதுமென்றால் வெளிப்படுத்தின விசேஷம் புஸ்தகத்தில் ஒவ்வொரு சபைக்கும் ஆவியானவர் எழுதும் போது "உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன் " என்ற வார்த்தையை மறக்காமல் குறிப்பிட்டிருக்கிறாரே அது ஏன்? மேலும் "ஆதியில் கொண்ட அன்பை விடுவது குற்றம்" என்றும் "ஜீவ புஸ்தகத்தில் எழுதிய பெயரை கூட கிருக்க்கிபோட முடியும்" என்று அங்கு சொல்லப்படடிருக்கிறதே! அன்பானவர்களே கிரியை இல்லாத விசுவாசம் செத்தது அதனால் எந்த பயனும் இல்லை.
நமது பசிக்கு இன்னொருவர் சாப்பிட முடியுமா?
"நாம் செய்த தவறுக்கு வேண்டுமானால் இன்னொருவர் தண்டனை அனுபவிக்க முடியும் அனால் நமது பசிக்கு இன்னொருவர் சாப்பிட முடியாது" அதுபோல எல்லோருடைய பாவங்களுக்கும் சேர்த்து இயேசு இரத்தம் சிந்திவிட்டார். அவர் இரத்தமேயன்றி நமக்கு பாவமன்னிப்பு இல்லை ஆனால் அதை பயன்படுத்தி பரலோகம் பொய் சேர்வது எப்படி நமது விசுவாசத்தில் உள்ளதோ அதுபோல மொத்த மனித கூட்டத்தையும் நரக அக்கினியில் இருந்து மீட்பது நமது கிரியையில் தான் உள்ளது இது ஏன் அனேகருக்கு புரிவதில்லை என்று தெரியவில்லை. ஆகவேதான் அவர் கிரியைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறார்.
இரண்டு வழிகளும் இயேசுவின் இரண்டு கற்பனைகளும்.
மேற்சொன்ன இரண்டு வழிகளும் இயேசுவின் இரண்டு பிரதான கற்பனைகளாக உள்ளது அவைகள்:
- உன் தேவனாகிய கர்த்தர் மீது முழு இருதயத்தொடும் முழு ஆத்துமாவோடும் அன்பு செலுத்துவாயாக
- உன்னிடத்தில் நீ அன்பு கூறுவதுபோல பிறரிடத்திலும் அன்பு கூறுவாயாக . இந்த இரண்டு கற்பனையையும் சுருக்கமாக சொன்னால்:
முழு கீழ்படிதல் - கர்த்தரிடத்தில் அன்பாக இருப்பது (அன்பாக இருப்பவன் அவர் கட்டளைகளை கைகொள்வான்) உதாரணம் - ஆபிரகாம் ஈசாக்கை பலியிட சென்றது) முழு இரக்கம் எனப்படும் மனதுருக்கம் - தன்னை போல பிறரை நேசிப்பது. உதாரணம் - இயேசு ஒருவரே
இதில் வேதபாரகரும் பரிசேயரும் வேதவார்த்தைக்கு அப்படியே கீழ்படிந்தார்கள் ஆனால் இரக்கத்தை விட்டுவிட்டார்கள். இன்றைய அனேக கிறிஸ்தவர்களிடம் முழுமையான இரக்கப்படுதலும் இல்லை முழுமையான கீழ்படித்தலும் இல்லை.
மேற்சொன்ன இரண்டு வழியில் எதில் நடக்க வேண்டுமென்றாலும் அது மனிதனின் சொந்த பலத்தினால் முடியாத ஒரு செயல். அகவேதான் பரிசுத்த ஆவி என்னும் ஒரு கூடுதல் பெலனை இயேசுவின் மரணம் மூலம் இறைவன் நமக்கு அருளியுள்ளார். அந்த ஆவியின் துணையுடன் விசுவாசத்தில் முழு பிரதிஷ்ட்டையோடு நடந்தால் கண்டிப்பாக மரணத்தை ஜெயிக்க முடியும் இந்த வழியை பற்றித்தான் நான் விளக்கம் கொடுக்க போகிறேன்.
ஜீவ விருட்ச்த்துக்கான பாதை:
நாம் இப்பொழுது எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய தீர்க்கதரிசிகளின் புத்தகத்தில் எசேக்கியேல் தீர்க்கதரிசி புத்தகத்துக்கு வருவோம். இது 48 அதிகாரம் உள்ள பெரிய புத்தகம். இதில் உள்ள எல்லா வார்த்தைகளுமே கர்த்தரால் நேரடியாக மனிதனுக்கு சொல்லப்பட்டது அல்லது வெளிப்படுத்தப்பட்டது. அதில் 18ஆம் அதிகாரத்தில் 5ஆம் வசனத்திலிருந்து நாம் இப்பொழுது பார்க்கலாம். அங்குதான் ஜீவ விருட்ச்த்துக்கான பாதை இருக்கிறது அதாவது சாகவே சாவாய் என்ற சாபத்தின் எதிர் சொல்லாகிய பிழைக்கவே பிழைப்பாய் என்ற ஜீவன் உள்ளது.
யார் பிழைக்கவே பிழைப்பார்? - நீதிமான் பிழைக்கவே பிழைப்பான் .
யார் அந்த நீதிமான்? கீழ்கண்ட 18 காரியங்களை கைகொண்டு நடபபவனே நீதிமான் அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று (நான் அல்ல) கர்த்தர் சொல்லுகிறார்.
- ஒருவன் நீதிமானாயிருந்து
- நியாயத்தையும் நீதியையும் செய்து
- மலைகளின் மேல் சாப்பிடாமலும்
- இஸ்ரவேல் வம்சத்தாரின் நரகலான விக்கிரகங்களுக்கு நேராக தன் கண்களை எறேடுக்காமலும்
- தன் அயலானுடைய மனைவியை தீட்டுபடுத்தாமலும்
- தூரஸ்திரியோடே சேராமலும்
- ஒருவனையும் ஒடுக்காமலும்
- கொள்ளையிடாமலும் இருந்து
- கடன் வாங்கியவனுக்கு அடமானத்தை திரும்ப கொடுத்து
- தன் அப்பத்தை பசித்தவனுக்கு பங்கிட்டு
- வஸ்த்திரம் இல்லாதவனுக்கு வஸ்த்திரம் தரிப்பித்து
- வட்டிக்கு கொடாமலும்
- பொலிசை வாங்காமலும்
- அநியாயத்துக்கு தன் கைகளை விலக்கி
- மனிதனுக்குள்ள வழக்கை உண்மையாய் தீர்த்து
- என் கட்டளைகளின் படி நடந்து
- என் நியாயங்களை கை கொண்டு
- உண்மையாயிருப்பனாகில்
அவனே நீதிமான் அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்கிறார்.
யார் நீதிமான் என்று சொல்லும் போது, அவன் நீதிமானாக இருக்கவேண்டும் என்று என்று வேதத்தில் சொல்லப்பட்டிருப்பதன் அருத்தம் எனக்கு நீண்ட நாளாக புரியவில்லை. ஒருநாள் இறைவன் அதை எனக்கு வெளிப்படுத்தினார். அதாவது ஒருவன் நீதிமானாக ஆக வேண்டுமென்றால் அவன் முதன் முதலில் இயேசுவின் பரிசுத்த இரத்தத்தால் கழுவப்பட்டு நீதிமானாக வேண்டும். இதை தான் எசாயா தீர்க்கன் மூலம் ஆண்டவர் 53:11ல் "என் தாசனாகிய நீதிபரர் தன்னை பற்றும் அறிவினால் அநேகரை நீதிமானாக்குவார்" என கூறுகிறார். . இதை நாம் சற்று விளக்கமாக பார்ப்பது நல்லது என நினைக்கிறேன். ஏனெனில் இது சம்பந்தமாக பல தவறான உபதேசம் அநேகரை துணிந்து பாவம் செய்யவைக்கிறது. இயேசு என்னை நீதிமானாக்கிவிட்டார் இனி பாவம் என்னை ஒன்றும் செய்யாது என்று பலர் இறைவனின் கட்டளைகளை துணிகரமாக மீறி பாவம் செய்து தண்டனையை அனுபவித்து வருகின்றனர். நீங்கள் எந்த காலத்தில் இருந்தாலும் எவ்வளவு பரிசுத்த இரத்தத்தால் கழுவப்பட்டாலும் பாவம் செய்தால் கண்டிப்பாக தண்டனை உண்டு. மனிதன் எதை விதைக்கிரானோ அதன் பலனை அறுத்தே தீருவான் ஏனென்றால் இந்த பூமியின் தன்மை அதுதான். பூமியில் விதை விதைத்தால் சில விதைகள் ஓரிரண்டு வாரங்களில் பலன் தரும், சில விதைகள் ஓரிரண்டு மதங்களில் பலன் தரும் சில விதைகள் சில வருடங்கள் கழித்தும், சில விதைகள் (பனை போன்றவை) சில தலைமுறைகள் கழித்தும் பலன் தரும். கோதுமையை விதைத்து நெல்லை அறுக்க முடியாது அதுபோல் எதை விதைக்கிறோமோ அது வட்டியும் முதலுமாக திரும்ப கிடைத்தே ஆகும். நன்மையை விதைத்தால் நன்மையும் தீமையை விதைத்தால் தீமையும் கண்டிப்பாக கிடைக்கும்.
அகவேதான் எரேமியா தீர்க்கன்: தன் பாவத்துக்கு வரும் தண்டனை குறித்து முறையிடுகிரதென்ன? நம் வழிகளை சோதித்து பார்த்து கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம் என்று புலம்பல் புஸ்தகத்தில் புலம்புகிறான்
தவறு இல்லாமல் தண்டனை இல்லை: தவறு செய்யாத பிள்ளையை எந்த ஒரு நல்ல புத்தியுள்ள தகப்பனும் தண்டிப்பது இல்லை அல்லது பிறன் கையில் தண்டனைக்கு ஒப்பு கொடுப்பது இல்லை. இந்த உலக தகப்பனே இப்படி இருக்கும்போது, மகா நீதியுள்ள நமது பரமதகப்பன் யாரையும் தவறு இல்லாமல் தண்டிப்பதும் இல்லை சாத்தான் கையில் தண்டனைக்கு ஒப்பு கொடுப்பதும் இல்லை.
.
.
அது எப்படி வந்தது இயேசு சிலுவையில் மரித்தபோது என்ன நடந்தது: . தேவாலயத்தின் திறைசீலை நடுவில் இரண்டாக கிழிந்தது (லுக்:23:45) இதே வசனத்தை மத்:28:51, மாற்கு:15:38 லும் பார்க்கலாம். அந்த திரை சீலை தான் மகா பரிசுத்த ஸ்தலத்தையும் பரிசுத்த ஸ்தலத்தையும் பிரிக்கும் தடுப்பு ஆகும். கர்த்தரின் கட்டளைபடி பிரதான ஆசாரியன் மட்டுமே வருடத்துக்கு ஒரு முறை அந்த திரையை கடந்து மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் போய் எல்லோருக்குமாக பாவநிவர்த்தி செய்து வருவான். அவனும் எதாவது தவறு செய்திருந்தால் அங்கேயே குளோஸ் பிறகு கயிறை கட்டித்தான் இழுக்க வேண்டி வரும். .
மோசே ஒரேபியிலே அந்த பெட்டியில் வைத்த இரண்டு கற்பலகைகளே அல்லாமல் வேறொன்றும் அதில் இல்லை (Iஇராஜா:8:9)
.
.
.
- பலியை அல்ல இரக்கத்தையே விரும்பிகிறேன், தகன பலிகளை காட்டிலும் தேவனை அறிகிர அறிவையும் விரும்புகிறேன் (ஓசி:6)
உங்கள் பலிகளின் திரள் எனக்கு என்னத்துக்கு என்று கர்த்தர் சொல்லுகிறார் (ஏசா:1:11)
நான் உங்கள் பிதாக்களை எகிப்த்து தேசத்தில் இருந்து அழைத்துவந்த நாளிலே தகன பலிகளை குறித்தும் மாற்ற பலிகளை குறித்தும் நான் பேசியதையும் கட்டளை இட்டதையும் பார்க்கிலும் என் வார்த்தைக்கு செவிகொடுங்கள் அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன்(எரே:7:22)
கர்த்தர் சத்தத்துக்கு கீழ்படிதலை பார்க்கிலும் சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்கு பிரியமாயிருக்குமோ? பலியை பார்க்கிலும் கீழ்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தை பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம் (I சாமு:15:22)
.
.
.
.
2. நியாயமும் நீதியும் செய்து:
.
கர்த்தர் சொல்கிறார் நியாயத்தை கை கொண்டு நீதியை செய்யுங்கள் (ஏசா:56:1)
நியாயம் தண்ணீரைபோலவும் நீதி வற்றாத நதியை போலவும் புரண்டுவரக்கடவது (ஆமோ:5:24)
வேதபாரகர் பரிசேயர் நீதியிலும் உங்கள் நீதி அதிகமயிராவிட்டால் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள் (மத் 5:20)
நியாயம் இன்னதென்று தீர்மானிக்காமல் இருக்கிரதென்ன(லூக்: 12:57)
இவ்வளவு முக்கியமான வார்த்தைக்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள். எந்த சபையிலாவது நீதி நியாயம் பற்றி விளக்கும் செய்திகள் கொடுக்கப்படுகிறதா? எனக்கு தெரிந்து ஒரு புத்தகம் கூட இந்த தலைப்பில் இருந்தமாதிரி தெரியவில்லை. இந்த நிலை ஏன்? தேவன் திரும்ப திரும்ப சொல்லும் வார்த்தைகளுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்காமல் நாம் என்னத்தை பேசிக்கொண்டு இருக்கிறோம்?
.
இலவசமாக தேவ நீதி நமக்கு கிடைத்தது உண்மை தான். அதற்காக நான் கிடைத்த நீதியை காத்துக்கொள்ள எந்த முயற்சியும் எடுக்கமாட்டேன் எந்நாளும் எங்கு இலவசமாக கிடைக்கிறதோ அதையே எதிர்பார்த்துக்கொண்டு இருப்பேன் என்பது சரியா? . எதோ மழை வெள்ளம் வந்ததால் அரசாங்கம் ஒரு குடும்பத்தும் 2000/- ரூபாயும் கொஞ்சம் அரிசியும் கொடுத்தால் வாழ்நாளெல்லாம் அப்படி கிடைக்கும் இலவசத்தையே எதிர்பார்த்து உழைத்து சம்பாதிக்க சோம்பேறித்தனம் படுவது போலல்லவா இன்றைய போதனைகள் இருக்கிறது.
.
.
.
.
.
.
.
.
மேற்சொன்ன இந்த 18 காரியங்களும் படிப்பதற்கு மிக சுலபமாக தெரியலாம் ஆனால் அதை கைக்கொள்ள ஆரம்பிக்கும்போதுதான் ஒவ்வொரு கட்டளையின் கடைசி ஆழம் வரை இறைவன் புதுபுது வெளிப்பாடுகளை கொடுத்துக்கொண்டே இருப்பார். கர்த்தர் சொன்ன இந்த 18 காரியங்களை கொஞ்சம் விளக்கமாக பார்க்க பக்கத்தில் உள்ள தலைப்பை "CLICK" செய்யவும்.
முடிவாக சில வார்த்தைகள்
மேல் சொன்ன 18 காரியங்களை நான் கை கொள்ள வேண்டிய தேவை இல்லை இயேசு எனக்காக மரித்துவிட்டார் என்று சொல்லும் சகோதரனே சகோதரியே மீண்டும் நான் உங்களுக்கு சொல்வது:
1. நீங்கள் இந்த உலகில் மரித்து பின்புதான் பரலோகமோ, நரகமோ போக முடியும்". நீங்கள் பரலோகமோ நரகமோ போவதினால் இந்த உலகத்துக்கு எந்த பயனும் இருக்காது.
ஆனால் கர்த்தர் சொன்ன இந்த கட்டளைகளை கைகொண்டு நடப்பவன் மரணமே இல்லாமல் "பிழைக்கவே பிழைப்பான்" என்று தேவனின் வார்த்தை சொல்கிறது. அத்தோடு மொத்த உலகமும் மீட்கப்பட்டு விடும்.
2. "தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் நிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்பட்டுள்ளன"என்ற வார்த்தைக்கு ஏற்ப, ஒருவன் ஒரு ஒய்வு நாளில் இருந்து இன்னொரு ஒய்வு நாள் அதாவது 7 நாட்கள் இந்த வார்த்தைகளின் படி சரியாக வாழ்ந்துவிட்டால் போதும், உடனே முடிவு வரும். ஏனென்றால் இந்த உலகம் 7 நாட்களில்தான் உருவானது, அது போல் 7 நாட்கள் ஒரு மனிதனின் கர்த்தரின் கட்டளைகள்படி முழுமையாக கீழ்படிந்து வாழந்து விட்டால் போதும் அவன் மரணத்தை ஜெயித்து விடலாம். அப்படி ஒருவன் எழும்பும் வரை இந்த உலகின் கிரியைகள் முடிந்து போகாது.
3. மேலும் இந்த உலகம் இவ்வளவு நாள் விட்டு வைக்கப்பட்டிருப்பதன் நோக்கம் ஒருவரும் கெட்டு நரகம் போக கூடாது என்ற இறைவனின் எதிர்பார்ப்பால் தான் என்பது தெரிந்ததே. ஆனால் ஒரு மனிதனை சுவிசேஷம் சொல்லி கிறிஸ்த்துவுக்குள் கொண்டு வரும் முன் கிறிஸ்துவை அறியாத 100 குழந்தைகள் பூமியில் பிறந்திருக்கும். ஆகையால் நாள் ஆக ஆக நரகம் போகும் கூட்டம் தான் அதிகமாகுமே தவிர பரலோகம் போகும் கூட்டமல்ல "ஏனெனில் ஜீவனுக்கு போகும் பாதை மிக குறுகியது அதை கண்டு பிடிப்பவர் சிலரே" என்று இயேசு கூறியுள்ளார். எனவே சுவிசேஷத்தால் எல்லோரையும் இரட்சிப்புக்குள் வழி நடத்துவது முடியாத காரியம். ஆனால் ஒரு மனிதன் இந்த வழியில் நடந்து மரணத்தை ஜெயித்து விட்டால் நரகத்தில் உள்ள மனிதரில் இருந்து எல்லா மனிதரையும் மீட்டு பிசாசுக்கு ஒரு முடிவையும் கொண்டு வர முடியும்.
4. ஆதம் பாவம் செய்தவுடன் அவனை அழித்திருந்தால் அந்த ஒரு ஜோடி மட்டும்தான் நரகத்துக்கு போகும் ஆனால் இன்று மனிதனை கோடான கோடியாக பெருகவிட்டு இத்தனை கோடா கோடி மக்கள் நரகத்திற்கு போக வைப்பது இறைவனின் திட்டம் என்று நினைக்கிறீர்களா, இல்லவே இல்லை. இறைவன் ஒவ்வொரு மனிதனையும் படைக்கும் போதும் இவன் தன் நோக்கத்தை நிறைவேற்ற மாட்டானா என்ற எக்கத்தில்தான் படைக்கிறார் ஆனால் எல்லோரும் வழி தவறி எங்காவது இடறிவிடுகின்றனர்.
இதை படிக்கும் அன்பு விசுவாசியே தயவு செய்து இதை எதோ வேறு விதமான ஆவியின் செயல் என்று நினைத்து ஒதுக்காமல், இறைவனிடம் அமர்ந்து இதை பற்றி விசாரித்து பாருங்கள் அப்பொழுது இதன் உண்மை நிலை புரியும்.
"ஒருவனாவது இந்த ஜீவ வழியில் நடந்து உலகை ஜெயிக்க மாட்டானா" என்பதே இறைவனின் ஏக்கம்.
-------முற்றும்-------