« Home | பொலிசை வாங்காமலும்: » | வட்டிக்கு கொடாமலும்: » | வஸ்த்திரம் இல்லாதவனுக்கு வஸ்த்திரம் தரிப்பித்து: » | தன் அப்பத்தை பசித்தவனுக்கு பங்கிட்டு:- » | கடன் வாங்கியவனுக்கு அடமானத்தை திருப்ப கொடுத்து » | கொள்ளையிடாமலும் இருந்து » | ஒருவனையும் ஒடுக்கமலும் » | தூர ஸ்திரியோடே சேராமலும்:- » | இஸ்ரவேல் தேசத்தாரின் நரகலான விக்கிரகங்களுக்கு நேரா... » | மலைகளின் மேல் சாப்பிடாமலும்: »

அநியாயத்துக்கு தன் கைகளை விலக்கி:-

அநியாயத்துக்கு தன் கைகளை விலக்கி:-

ஒருவன் நியாயமும் நீதியும் செய்தால் மட்டும் போதாது, அநியாயமான செயலுக்கு தன் கைகளை துணைபோக விடக்கூடாது.

இன்று உலகில் நியாயமாக நடப்பவர்களை பார்ப்பதே அரிது அதிலும் சிலர் என் நியாயம் என்னோடு மற்ற எதையும் யாரையும் பற்றி எனக்கு கவலை இல்லை என்ற போக்கில் நடப்பார்கள். அது சரியல்ல.


தனக்கு மேலுள்ள அதிகாரி லஞ்சம் வாங்க ஒத்துழைக்கும் ஆபிசர், அரசாங்க சட்டத்தை ஏய்க்கும் ஒருவருக்கு துணை செய்யும் தொழிலாளி, லாயர், கணக்காளர் போன்றவர்கள் குற்றவாளிகளே!


நியாயமற்ற செயலை செய்பவனுக்கும், நியாயமற்ற முறையில் பணம் சம்பாதிக்கும் ஒருவருக்கும் சிர்ரிதளவேனும் துணை செய்வதும் இறைவனுக்கு பிடிக்காத செயல்களே. .ஒரு முறை நான் வேலை பார்த்த கம்பனி ஒன்று தவறான கணக்கை கொடுத்து வங்கியில் அதிக லோன் பெற்றுவிட்டது. ஒருநாள் அந்த வங்கி மேனேஜர் கணக்கை செக்பண்ண எங்கள் அலுவலகம் வந்து விட்டார். நான் தவறான கணக்கு எழுதுவது இல்லை என்று முன்பே அவர்களக்கு பல முறை சொல்லியிருந்தும் என்னை அந்த தவறான கணக்கை விளககி கணினியில் காட்டும்படி எவ்வளவோ கேட்டும் நான் மறுத்துவிடேன். அதனால் எனது வேலை போகும் நிலை வந்தது ஆனாலும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் அது தீர்ந்து விட்டது.

"உத்தம இதயத்தோடு நடப்பவர்களுக்கு உதவி செய்யும்படி கர்த்தருடைய கண்கள் பூமி எங்கும் உலாவிக்கொண்டிருப்பதால்" நாம் சிறிதும் கலங்க தேவை இல்லை. கர்த்தர் கண்டிப்பாக தகுந்த சமயத்தில் உதவி செய்வார் எனவே அநியாய செயலுக்கு உடன்போகமல் தன் கைகளை விலக்க வேண்டும்.

Edit this page (if you have permission) | Google Docs -- Web word processing, presentations and spreadsheets.