« Home | ஒருவனையும் ஒடுக்கமலும் » | தூர ஸ்திரியோடே சேராமலும்:- » | இஸ்ரவேல் தேசத்தாரின் நரகலான விக்கிரகங்களுக்கு நேரா... » | மலைகளின் மேல் சாப்பிடாமலும்: » | நியாயமும் நீதியும் செய்து: » | ஒருவன் நீதிமானாய் இருந்து » | தன் அயலானுடைய மனைவியை தீட்டுப் படுத்தமலும் » | மரணமில்லா வாழ்க்கைக்கு வழி »

கொள்ளையிடாமலும் இருந்து

கொள்ளையிடாமலும் இருந்து: -
கொள்ளை இடக்கூடாது என்பது வங்கி கொள்ளை போன்ற மிகப்பெரிய கொள்ளயிலிருந்து சாதரண அலுவலக பென்சில் திருட்டு வரை எல்லாவற்றையும் குறிக்கிறது.

பிறர் பொருளை அவர்கள் அனுமதி இல்லாமல் அபகரிப்பது, உபயோகிப்பது மேலும் வியாபாரத்தில் அதிகள் லாபம் வைத்து விற்பது, நிறுவையில் ஏமாற்றுவது, பிறரை ஏமாற்றி சம்பாதிப்பது, உள்தரகு வைத்து செயல்படுவது போன்றவை இதில் அடங்கும்.

அநேகர் பெரிய அளவில் திருட்டு செய்வதில்லை என்றாலும் சில்லறை காரியங்களில் கொள்ளை அடித்து சம்பாதிக்கின்றனர். அலுவலகத்தில் உள்ள பொருட்களை வீடு உபயோகத்திற்கு கொண்டு வருவது, வேலை பார்க்கும் தொழிற்சாலையில் உள்ள பொருட்களை தெரியாமல் எடுத்து வந்து விற்பது, தான் உண்மையாக செலவழித்த பணத்தைவிட அதிகம் கிளைம் பண்ணுவது, பொய் சர்டிபிகேட் கொடுத்து பணம் க்ளைம் பண்ணுவது போன்றவை இன்று உலகில் சகஜமாக உள்ளது. ஏன் தெரு பெருக்க கொடுக்கும் துடைப்பான் மற்றும் பிளீச்சிங் பவுடர் கூட விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

அவனவன் அவனவன் தகுதிக்கு தகுந்தாற்போல் கொள்ளை அடித்து சம்பாதிக்கின்றனர். ஏன் என்று கேட்டால் சம்பளம் காணாது, இப்படி பிழைத்தால் தான் வாழ முடியும் என்று எதாவது சாக்கு சொல்கிறார்கள்.

கொஞ்சத்தில் உண்மையை உள்ளவனை தான் இறைவன் அநேகத்துக்கு அதிபதியாக மாற்ற முடியும். தன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட சின்ன காரியத்தில் உண்மை இல்லாதவனை எந்த எஜமான் உயர்த்துவான்? சன்று யோசித்து பாருங்கள். அகவே நீங்கள் உயர்த்தப்பட வேண்டுமென்றால் கொள்ளையிடககூடாது என்று கார்த்தர் கட்டளை இட்டுள்ளார்.

Edit this page (if you have permission) | Google Docs -- Web word processing, presentations and spreadsheets.