« Home | தன் அப்பத்தை பசித்தவனுக்கு பங்கிட்டு:- » | கடன் வாங்கியவனுக்கு அடமானத்தை திருப்ப கொடுத்து » | கொள்ளையிடாமலும் இருந்து » | ஒருவனையும் ஒடுக்கமலும் » | தூர ஸ்திரியோடே சேராமலும்:- » | இஸ்ரவேல் தேசத்தாரின் நரகலான விக்கிரகங்களுக்கு நேரா... » | மலைகளின் மேல் சாப்பிடாமலும்: » | நியாயமும் நீதியும் செய்து: » | ஒருவன் நீதிமானாய் இருந்து » | தன் அயலானுடைய மனைவியை தீட்டுப் படுத்தமலும் »

வஸ்த்திரம் இல்லாதவனுக்கு வஸ்த்திரம் தரிப்பித்து:

வஸ்த்திரம் இல்லாதவனுக்கு வஸ்த்திரம் தரிப்பித்து:

வெளி இடங்களுக்கு செல்பவர்கள் சில நேரங்களில் உடுக்க முட வஸ்த்திரமே இல்லாமல் கஷ்டப்படும் மனிதர்களை பார்க்க நேரிடலாம். உடை இல்லாத ஒருவனை பார்த்தல் நம்மால் முடிந்த அளவு உதவி செய்து அவனுக்கு ஒரு உடையை வாங்கி கொடுக்க வேண்டும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

இது பல நேரங்களில் கூடாமல் போகலாம். ஆனாலும் நம்மால் முடிந்த அளவு முயற்சி செய்து கர்த்தரின் கட்டளைகளை நிறைவேற்ற பிரயாசப்பட வேண்டும். வெறும் "பாவம்" என்று சொல்லி "உச்" கொட்டி விட்டு போவதால் எந்த பயனும் இல்லை. செயலில் இறங்க வேண்டும்.

ஒருமுறை சென்னை நந்தனம் சிக்னல் பக்கம் ஒரு வஸ்த்திரம் இல்லாத மனிதனை பார்த்து தேனாம்பேட்டை பஸார் வரை சென்று ஒரு துணி வாங்கி கொடுத்தேன் ஆனால் எவ்வளவோ கெஞ்சி கேட்டும் அவன் துணியை வாங்க மறுத்து விட்டான் என்ன செய்ய? ஆனாலும் நமது முயற்சி அங்கு இருக்க வேண்டும்.



Comments

Edit this page (if you have permission) | Google Docs -- Web word processing, presentations and spreadsheets.