« Home | கடன் வாங்கியவனுக்கு அடமானத்தை திருப்ப கொடுத்து » | கொள்ளையிடாமலும் இருந்து » | ஒருவனையும் ஒடுக்கமலும் » | தூர ஸ்திரியோடே சேராமலும்:- » | இஸ்ரவேல் தேசத்தாரின் நரகலான விக்கிரகங்களுக்கு நேரா... » | மலைகளின் மேல் சாப்பிடாமலும்: » | நியாயமும் நீதியும் செய்து: » | ஒருவன் நீதிமானாய் இருந்து » | தன் அயலானுடைய மனைவியை தீட்டுப் படுத்தமலும் » | மரணமில்லா வாழ்க்கைக்கு வழி »

தன் அப்பத்தை பசித்தவனுக்கு பங்கிட்டு:-

தன் அப்பத்தை பசித்தவனுக்கு பங்கிட்டு:-

பசியோடு இருக்கும் ஒருவனுக்கு தனது உணவை பங்கிட்டு கொடுக்க வேண்டும் என்று கர்த்தர் கட்டளையிட்டுள்ளார். பசி என்று நம்மிடம் உதவி வேண்டி வரும் யாருக்கும் நம்மிடம் இருப்பதை பங்கிட்டு கொடுக்க வேண்டும்.

இன்று உலகில் நல்ல நிலையில் இருந்துகொண்டு ஏமாற்றி பிச்சை எடுப்பவர்கள் அநேகர் இருப்பதால் நாம் உண்மையில் பசியாய் இருப்பவனை எப்படி கண்டு பிடிப்பது என்று கேட்கலாம். ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்: நானும் எனது நண்பனும் மும்பை தாரவி பகுதியில் நடந்து போய்கொண்டு இருக்கும்போது ஒரு பிச்சைக்காரன் வயிர் பசி என்று சொல்லி சாப்பிட எதாவது கேட்டான். நான் எனது பையில் இருந்து 2ரூபாயை எடுத்து கொடுத்தேன் உடனே என் நண்பன் கோபமாக "நீ இப்படி பணம் கொடுக்கிராயே இவன் உடனே சாராய கடைக்கு போக போகிறான் அந்த பாவம் உன்னைத்தான் சாரும்" என்றான். நான் அவனிடம் "அவன் என்னிடம் பணம் கேட்டது வயிறு பசிக்கு சாப்பிடத்தான், நானும் அந்த நோக்கத்தோடுதான் பணம் கொடுத்தேன். அவன் அந்த பணத்தை கொண்டுபோய் வேறு எதாவது காரியம் செய்தால் அந்த பாவம் அவனோடு. ஒரு காரியத்தை செய்யும் போது என்ன நோக்கத்தோடு செய்கிறோம் என்பது தான் முக்கியம். ஒருவேளை நான் அவனுக்கு பணம் கொடுக்காமல் போய் அவன் உண்மையிலேயே பசியால் வருந்தினால் நாளை இறைவன் என்னிடம் அல்லவா கேள்வி கேட்பார் என்று பதில்சொன்னேன்.


கர்த்தர் நமது பணத்தில் ஒரு காசு கூட காரணமில்லாமல் வீண் படுத்த மாட்டார் என்ற உறுதியான நம்பிக்கை எனக்கு உண்டு. எனவே நான் ஆண்டவரிடம் "ஆண்டவரே என்னிடம் உதவி கேட்டு வருபவர் நல்லவரா கெட்டவரா என்பது எனக்கு தெரியாது. என்னிடம் உதவி என்று வந்தால் என்னால் முடிந்தால் கண்டிப்பாக செய்வேன் எனவே உண்மையாய் தேவை உள்ளவர்களை மாத்திரம் என்னிடம் அனுப்புங்கள்" என்ற வேண்டுதலோடு நம்மிடம் வரும் எல்லோருக்கும் நாம் உதவி செய்ய கடமைபட்டுள்ளோம்

எனவே பசித்தவனை கண்டால் அவனுக்கு தனக்குள்ள உணவை கூட பங்கிட்டு கொடுக்க கடவோம்.

Edit this page (if you have permission) | Google Docs -- Web word processing, presentations and spreadsheets.