« Home | மனிதர்களுகுள்ள வழக்கை உண்மையாய் தீர்த்து: » | அநியாயத்துக்கு தன் கைகளை விலக்கி:- » | பொலிசை வாங்காமலும்: » | வட்டிக்கு கொடாமலும்: » | வஸ்த்திரம் இல்லாதவனுக்கு வஸ்த்திரம் தரிப்பித்து: » | தன் அப்பத்தை பசித்தவனுக்கு பங்கிட்டு:- » | கடன் வாங்கியவனுக்கு அடமானத்தை திருப்ப கொடுத்து » | கொள்ளையிடாமலும் இருந்து » | ஒருவனையும் ஒடுக்கமலும் » | தூர ஸ்திரியோடே சேராமலும்:- »

என் கட்டளைகளின் படி நடந்து:-

என் கட்டளைகளின் படி நடந்து:-

கர்த்தரின் கட்டளைகள் யாத்ரகமும் 20, உபாகமம் 5ம் அதிகரத்திலும் விவரிக்கப்பட்டுள்ளது. அவர் கட்டளைகளின்படி ஒவ்வொருவரும் கண்டிப்பாக நடக்க வேண்டும். அவைகள்:

1. உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்த்து தேசத்திலிருந்து கொண்டுவந்த உன் தேவனாகிய கர்த்தர் நானே என்னையன்றி உனக்கு வேறு தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்:

நம்மை எகிப்த்து என்ற மாமிசம் சார்ந்த வாழ்கையில் இருந்து ஆவிக்குரிய வாழ்க்கைக்கு மீட்டு கொண்டுவந்த கார்த்தர் ஒருவர் மட்டுமே நமது தேவனாக இருக்க வேண்டும் அவர் தவிர வேறு எந்த ஒரு தேவனையும் நாம் வணங்கக் கூடாது

2. மேலே வானத்திலும் கீழே பூமியிலும், பூமியின் கீழ் தண்ணீரிலும் உண்டாயிருப்பவைகளுக்கு ஒப்பான ஒரு சுரூபத்தயாவது, விக்ரகத்தையாவது நீ உனக்கு உண்டாக்க வேண்டாம், அவற்றை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்.
விக்ரக வழிபாடு கூடாது என்றும் அது கடுமையான குற்றம் என்றும் இறைவன் மீண்டும் மீண்டும் பல்வேறு இடங்களில் குறிப்பிடுகிறார். காரணம் என்ன என்று அறிந்து கொள்ள http://www.neartoend.blogspot.com/ தளத்தில் "இறைவன் என் விக்கிரக வழிபாட்டுக்கு தடை விதித்தார்" பார்க்கவும் விக்ரக வழிபாடு என்பது வெறும் சிலையை, உருவத்தை வழிபடுவது மட்டும்தான் என்று நினைக்க வேண்டாம். நம் மனதில் இறைவனுக்கு ஒப்பாக எந்த ஒரு பொருளுக்கோ பணத்துக்கோ இடம் கொடுத்தால் அது விக்ரகம் ஆகிவிடும்
அநேகர் சிலையை வழிபட வில்லை என்றாலும் அவர்களின் மனதில் பணத்துக்கோ, சொந்த வீட்டுக்கோ, செய்யும் வேலைக்கோ, தன் காதலிக்கோ, தன் மனைவி பிள்ளைகளுக்கோ, அல்ல எதாவது ஒன்றுக்கோ முதலிடம் இருக்கலாம் அதுவும் விக்கிரக வழிபாடாகத்தான் இறைவனுக்கு தெரியும்.


3 உன் தேவனாகிய கர்த்தரை பரீட்சை பாராதிருப்பயாக.

கர்த்தரின் வார்த்தைகளையும் கர்த்தரையும் சோதித்து பார்க்கக் கூடாது. பொதுவாக நமது சுய தேவைக்காக கர்த்தரின் வார்த்தைகளை பயன் படுத்த கூடாது. இன்று இஸ்லாமியர்கள் நீங்கள் பைபிள் உண்மை என்று எங்கள் முன் நிரூபியுங்கள் என்று வேத வார்த்தைகளை பரீட்சை செய்ய நினைக்கின்றனர். ஆனால் அது அவர்களால் முடியாது இறைவன் சொன்ன வார்த்தைகளை நிரூபிக்க இறைவனால் மட்டும்தான் முடியும் நாம் அதை சொத்தித்து பார்க்க கூடாது.


4 ஒய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிக்க நினைப்பாயாக, ஆறு நாளும் வேலை செய்து உன் கிரியைகளை எல்லாம் நடப்பிப்பாயக, ஏழாம் நாளோ உன் தேவனாகிய கர்த்தரின் ஒய்வு நாள் அதில் யாதொரு வேலையும் செய்ய வேண்டாம்."

நீ இளைப்பாறுவது போலவே உன் வேலைக்காரன், வேலைக்காரி, மாடு, கழுதை எல்லாமே இளைப்பாற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஒய்வு நாளில் வேலை செய்யக்கூடாது என்பது கர்த்தரின் மாறாத பிரமாணம் அதை அவர் பல முறை தீர்க்கதரிசிகள் புத்தகங்களில் சொல்லி எச்சரித்துள்ளார் "என் பரிசுத்த ஓய்வுநாளில் உன் வழிகளில் நடவாதே, உனக்கு பிரியமானத்தை செய்யாதே" என்றும் "ஒய்வு நாளில் உன் வாசஸ்தலம் எங்கும் நெருப்பு மூட்டாதிருப்பாயாக" என்று கூட யாத்ராகமம் புத்தகத்தில் கூறியுள்ளார்.


எனவே ஒய்வு நாளை நமது இஸ்டப்படியல்ல, அவர் சொன்ன வார்த்தைகள்படி பரிசுத்தமாக ஆசாரிக்க வேண்டும்.

5. தகப்பனையும் தாயையும் கணம் பண்ணுவாயாக:

6. கொலை செய்யாதிருப்பயாக

7.விபச்சாரம் செய்யதிருப்பயாக

8.களவு செய்யாதிருப்பாயாக

9.பிறருக்கு விரோதமாக பொய் சாட்சி சொல்லாதிருப்பாயாக

10. பிறருடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக, பிறனுடைய வீட்டையும், அவன் வேலைக்கரியையும், வேலைக்காரனையும் அவன் எருதையும் அவன் கழுதையையும் யாதொன்றையும் இச்சியாதிருப்பயாக.

இவை எல்லாம் மனிதர்கள் கண்டிப்பாக கைகொள்ளவேண்டிய கட்டளைகள்.


Edit this page (if you have permission) | Google Docs -- Web word processing, presentations and spreadsheets.