« Home | அநியாயத்துக்கு தன் கைகளை விலக்கி:- » | பொலிசை வாங்காமலும்: » | வட்டிக்கு கொடாமலும்: » | வஸ்த்திரம் இல்லாதவனுக்கு வஸ்த்திரம் தரிப்பித்து: » | தன் அப்பத்தை பசித்தவனுக்கு பங்கிட்டு:- » | கடன் வாங்கியவனுக்கு அடமானத்தை திருப்ப கொடுத்து » | கொள்ளையிடாமலும் இருந்து » | ஒருவனையும் ஒடுக்கமலும் » | தூர ஸ்திரியோடே சேராமலும்:- » | இஸ்ரவேல் தேசத்தாரின் நரகலான விக்கிரகங்களுக்கு நேரா... »

மனிதர்களுகுள்ள வழக்கை உண்மையாய் தீர்த்து:

மனிதர்களுகுள்ள வழக்கை உண்மையாய் தீர்த்து:
நாம் பூமியில் வாழும் காலங்களில் சக மனிதர்கள், உறவினர்கள், தொழிலாளர்கள் போன்றவர்களின் வழக்குகள் நம்மிடம் நியாயம் தீர்க்க வரலாம். அப்படி வரும்போது நாம் "நியாய விசாரணையில் முகதாட்சினியம் பார்க்கவேண்டம்" என்ற கர்த்தரின் வார்த்தைக்கு ஏற்ப பெரியவனுக்கு பயப்படாமலும், சிரியவனுக்கு இரங்காமலும், பணக்காரனுக்கு கண் ஜாடையாக இராமலும் உண்மையாய் நியாயம் தீர்க்க வேண்டும் என்று கர்த்தர் கட்டளை இட்டுள்ளார்.

பொதுவாக மனிதர்கள் தன்ன்கு பிடித்தவர்கள் பக்கம் சாய்ந்துகொண்டு பிடிக்காதவர்களின் நியாயத்தை புரட்டுவது சகஜமாக உள்ளது.
தன் மகன் தப்பு செய்தால் கண்டிக்காமல் "அப்படியெல்லாம் செய்யக்கூடாது தம்பி" என்று அன்பாக கண்டிக்கும் பெற்றோர் பிறரின் பிள்ளைகள் தப்பு செய்தால் கடும் கோபமுடன் எரிவதையும், தன் பிள்ளை என்ன தவறு செய்தது என்பதை சற்றும் விசாரிக்காமல் பிறர் வீட்டில் குடும்பத்தோடு கொடி கட்டிக்கொண்டு பொய் சண்டை போடும் மனிதர்களை இன்று ஏராளம் பார்க்கலாம்.

ஆனால் நாம் அப்படி செய்யாமல் யாருடைய வழக்கானாலும் இரண்டு பக்கமும் உள்ள நியாயத்தை விசாரித்து உண்மையாக நியாயம் தீர்க்க வேண்டும் என்று கர்த்தர் கட்டளை இட்டுள்ளார்


Edit this page (if you have permission) | Google Docs -- Web word processing, presentations and spreadsheets.